சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி… 5பேர் உடல் கருகியது
சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார் 5 படுகாயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது செங்கமலப்பட்டி. இங்கு சங்கரேஸ்வரி (வயது 50) என்பவருக்கு சொந்தமான வினோதா பட்டாசு ஆலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஆலையில் ஆலமரத்துப்பட்டி மற்றும் சுற்றுப் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் அங்குள்ள 10க்கும் மேற்பட்ட அறைகளில் தனித்தனியாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு ஆறையில் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் உள்பட 6 பேர் பேன்சி வெடிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று ஏற்பட்ட உராய்வில் அங்கிருந்த பட்டாசுகளில் தீ பிடித்தது. இதில் பட்டாசுகள் வெடித்து இதில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.
இந்த சம்பவத்தில் செல்வராஜ் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். மேலும் 5 பேர் உடல் கருகினார். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சிவகாசி கிழக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவ விடாமல் தடுத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications