2014 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு ரசீது!: தேர்தல் ஆணையம் தகவல்
டெல்லி: 2014ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு ரசீது வழங்கும் முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகளில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், அதனை தடை செய்ய வேண்டும் என்றும் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறை வெளிநாடுகளில் வாபஸ் பெறப்பட்டுவிட்டதாகவும் சுவாமி தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கள்ள ஓட்டைத் தடுக்கும் வகையில் 180 வாக்குச்சாவடிகளில் வாக்கு அளித்தவர்களுக்கு பரிசோதனை முறையில் வழங்க திட்டமிட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இதனால் கள்ள ஓட்டைத் தவிர்க்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ள தேர்தல் ஆணையம் நிபுணர்களின் ஆலோசனைக்கு பிறகு முழுமையான ரசீது முறை அமல்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வடிவமைக்க பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன், வாக்காளர்களுக்கு ரசீது வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறிய தேர்தல் ஆணையம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை அமலாகும் என விளக்கம் அளித்துள்ளது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications