ஊழல் கறையோடு விலகிச் சென்ற கத்காரி.. பாஜக தலைவராக ராஜ்நாத் சிங் தேர்வு

இதையடுத்து பாஜக முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங்கே மீண்டும் அக் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாஜக தலைவராக இருக்கும் நிதின் கத்காரி மீண்டும் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டார். அவருக்கு ஆர்.எஸ்.எஸ்.ஸும் முழு ஆதரவைத் தெரிவித்தது. ஆனால் அத்வானி குரூப் இதை விரும்பவில்லை. சுஷ்மா சுவராஜை தலைவியாக்க அவர் தீவிரமாக முயன்றார். ஆனால் அது முடியவில்லை. இதனால் கத்காரி மீண்டும் தலைவராகும் வாய்ப்புகள் பிரகாசமாகின.
இந்த நிலையில்தான் ஐடி ரெய்டு மூலம் கத்காரிக்கு பெரும் சோதனை நேற்று வந்தது. நிதின் கட்காரிக்கு சொந்தமான பூர்த்தி குழுமத்துடன் தொடர்புடைய மும்பையில் இருக்கும் 9 நிறுவனங்களில் நேற்று வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
சோதனை நடைபெற்ற இந்த நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் எந்தவித சொத்துக்களோ அல்லது பரிவர்த்தனைகளோ இல்லாவிட்டாலும், அவற்றின் மூலம் வர்த்தக பரிமாற்றங்கள் நடைபெற்று உள்ளன. ஏற்கனவே நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சியாக, ரெய்டு நடத்தப்பட்டதாக வருமான வரித்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பூர்த்தி குழும கம்பெனிகளில் சந்தேகத்துக்கு இடமான வகையில் முதலீடு செய்துள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நிதின் கட்காரிக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி வைத்து உள்ளனர். ஆனால், கட்சிப்பணிகள் காணமாக, தன்னால் நேரில் ஆஜராக முடியாது என்றும், மேலும் கால அவகாசம் அளிக்கும்படியும் கட்காரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி அன்று அவரை நேரில் ஆஜராகும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து தனது கட்சித் தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார் கத்காரி. இதுதொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்ட அறிக்கையில், நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தத் தவறையும் செய்யவில்லை. என்னால் கட்சியின் நலன் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை. எனவே பாஜக தலைவராக மீண்டும் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
இந்தத் திடீர் திருப்பத்தால் பாஜகவினர் ஆச்சரியமடைந்துள்ளனர். இருப்பினும் இதை அவர்கள் எதிர்பார்த்தது போலவே தெரிகிறது. இந்த நிலையில் அடுத்த தலைவராக முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை நடந்த பாஜக உயர் மட்டக் கூட்டத்தில் அவரை தலைவராக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கூட்டம் அத்வானி தலைமையில் நடந்தது. ராஜ்நாத் சிங்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆர்எஸ்எஸ் அனுமதியுடன் அவரைத் தேர்வு செய்துள்ளது பாஜக.
பாஜக தலைவராக இருந்த ஒருவர் (கத்காரி) ஊழல் குற்றச்சாட்டோடு பதவி விலகிச் செல்வது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications