நாராயணசாமி நம்பிக்கையா சொல்றாரே.. அப்போ காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அவ்வளவுதானா!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுவது குறித்து பிப்ரவரி 4ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர், பிரதமரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். எனவே, வரும் பிப்ரவரி 4ம் தேதிக்குள் காவிரி மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது குறித்து பிரதமர் முடிவெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை உத்தரவிட்டும் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.
மாலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஹிந்து அடிப்படைவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே ஹிந்து தீவிரவாதம் குறித்து காங்கிரஸ் மாநாட்டில் பேசியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை.
நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வரும்.
விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை விமான நிலையத்துக்கு, எம்ஜிஆர் பெயர் சூட்ட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். இவர் இங்கிருந்து கொண்டு மத்திய அரசை குறை கூறி அறிக்கை வெளியிடுவது வேலையாகி விட்டது. மத்திய அரசு செய்யும் நல்ல திட்டங்களை கூட, குறை கூறுவது சரியல்ல. ஒரு பொது நிறுவனத்துக்கு தனி நபர் பெயர் சூட்டுவதை பற்றி, தனியாக யாரும் முடிவு எடுக்க முடியாது. மத்திய அமைச்சரவை கூடிதான் முடிவு எடுக்க முடியும்.
பொது வாழ்வில் இருப்பவர்கள் மீதும், மத்திய அமைச்சர்கள் மீதும் யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக உடனடியாக தவறான செய்தியை ஒளிபரப்பக்கூடாது. ஊடகங்கள், பத்திரிகைகள் தங்களுக்குள்ள உரிமைகளை தவறாக பயன்படுத்த கூடாது. மத்திய அமைச்சர் அழகிரி மீது வெளியிடப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. தவறான செய்தி என்றார்.
மேலும் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஓரிரு இயந்திரங்களில் திடீர் பழுது ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது என்றார் நாராயண சாமி.
1,246....!!!
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications