இன்டர்நெட்டில் உல்லாச வீடியோ விவகாரம்: தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்
கோவை: வால்பாறை அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் உல்லாசமாக இருந்த தலைமை ஆசிரியர், மற்றொரு பள்ளியின் தலைமை ஆசிரியை உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் சோலையாறு எஸ்டேட் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 150 மாணவ, மாணவியர் படிக்கும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், வேறு ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியையும் நிர்வாணமாக இருக்கும் ஆபாச வீடியோ இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த திங்கட்கிழமை அன்று வால்பாறை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்த பிறகே சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும் தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர் தெரிவித்தனர்.
இந்நிலையில் பள்ளியில் உல்லாசமாக இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசார் மனு அளித்தனர். இதையடுத்து இணையதளத்தில் வெளியாகியுள்ள வீடியோவின் உண்மை தன்மையை அறியும் வரை தலைமை ஆசிரியர் உதயன் மற்றும் அவருடன் இருந்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் முன்னதாக இதே போன்ற விவகாரத்தில் சிக்கிய சோலையாறு பள்ளி ஆசிரியையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications