மாணவியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அசிங்கமாகப் பேசிய ஆசிரியர்
திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் அடாத செயலில் ஈடுபட்டு சிக்கியுள்ளார்.
வேங்கடத்தனூர் என்ற ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருப்பவர் சுந்தரம். இவர் மீது ஏகப்பட்ட புகார்களை அப்பள்ளி மாணவியரும், அவர்களது பெற்றோர்களும் சுமத்தி வந்தனர். இதுதொடர்பாக வந்த புகார்களைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி ஜெயக்குமார் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து ஒரு பெரிய குழுவே பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியது. கிட்டத்தட்ட 5 மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளிவந்தன.
ஆசிரியர் சுந்தரத்தின் அடாத செயல்கள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது...
ஆசிரியைகள்- மாணவிகளிடம் ஆபாசப் பேச்சு
அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் சுந்தரம் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகளிடமும், மாணவிகளிடமும் ஆபாச வார்தைகளை அவர் பேசி வந்துள்ளார்.
செக்ஸியாக இருக்கிறாய் என்று கூறி முத்தம்
மாணவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து, மாணவி ஒருவரை பார்த்து, நீ மிகவும் செக்சியாக இருக்கிறாய் என்று கூறி வகுப்பறையிலேயே முத்தம் கொடுத்த சம்பவமும் நடந்துள்ளது.
உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை
அவர் செய்து வந்த பாலியல் தொல்லை குறித்து அறிக்கை தயார் செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நடவடிக்கை இல்லாவிட்டால் பள்ளியை மூடுவோம்
குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் சுந்தரம் மீது 4 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பள்ளியை மூடி போராட்டம் நடத்துவோம் என்று பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். இதனால் தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவுகிறது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications