குடியரசு தினத்தன்று டெல்லியில் 4 இடங்களைத் தாக்க லஷ்கர்-இ-தொய்பா திட்டம்?
டெல்லி: குடியரசு தினத்தன்று டெல்லியில் 4 இடங்களை குண்டு வைத்து தகர்க்க பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.
மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட பாகிஸ்தான் தீவரவாதி அஜ்மல் கசாபின் மரணத்திற்கு பழிவாங்கப் போவதாக லஷ்கர்-இ-தொய்பா மிரட்டியது. இந்நிலையில் குடியரசு தினத்தன்று அந்த அமைப்பு தெற்கு டெல்லியில் உள்ள கோவில், சாந்தினி சவுக், காந்தி நகர் மார்க்கெட் மற்றும் ஒரு மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய 4 இடங்களை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இந்த தாக்குதல்களை அல் கொய்தா மற்றும் தெஹ்ரிக்-இ-தாலிபான் ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது லஷ்கர்-இ-தொய்பா. இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் சாதாரண உடை அணிந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்தவுள்ள தீவிரவாதிகள் ஏற்கனவே இந்தியாவுக்குள் வந்துவிட்டதாகவும், இந்தியன் முஜாஹிதீன் உதவியுடன் வெடிபொருட்கள் டெல்லிக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தீவிரவாதிகளின் திட்டத்தை தவிடுபொடியாக்க டெல்லி போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications