லோக்சபா தேர்தல் வியூகம் வகுக்க நாளை கூடுகிறது தேமுதிக பொதுக்குழு!
Subscribe to Oneindia Tamil

லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று அண்மையில் அதிமுகவின் பொதுக்குழுவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். திமுகவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கூட்டணியில் அது தொடர்ந்தும் நீடிக்கும். இந்த அணியில் தேமுதிக இணையக் கூடும் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேமுதிகவின் 8-வது செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்குகிறார். இதில் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அனைத்து பிரிவு நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்தக் கூட்டத்தில் லோக்சபா தேர்தல் தொடர்பாகவும் கூட்டணி பற்றியும் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications