மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு கர்நாடக பாஜக அரசுக்கு உத்தரவிடப் போகும் ஆளுநர்
பெங்களூர்: முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பதை உணர்ந்தால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வரை நான் கேட்டுக்கொள்வேன் என்று கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் கூறியுள்ளார். இதனால் கர்நாடக பாஜக அரசுக்கு சிக்கல் வலுத்துள்ளது.
எதியூரப்பா ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகி வருவதாலும், பலர் விலக தயாராகி வருவதாலும், ஜெகதீஷ் ஷெட்டர் அரசு ஏற்கனவே சிக்கலில் உள்ளது. இந்த நிலையில் ஆளுநர் பரத்வாஜின் பேச்சு ஷெட்டருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப் போவதாக பாஜகவைச் சேர்ந்த 13 பேர் அறிவித்துள்ளதன் பின்னணியில் பரத்வாஜ் இப்படிப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்க்கது.
இதுகுறித்து ஆளுநர் கூறுகையில், சட்டசபையை பிப்ரவரி 4ம் தேதி பட்ஜெட் தொடருக்காக கூட்டியுள்ளேன். ஷெட்டர் அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்று நான் உணர்ந்தால் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வரைக் கேட்டுக் கொள்வேன். அதை முதலில் செய்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்குமாறும் அவரைக் கேட்டுக் கொள்வேன் என்றார்.
முன்னதாக 13 அதிருப்தி பாஜக எம்.எல்.ஏக்களும் புதன்கிழமையன்று சபாநயாகர் போபய்யாவை சந்திக்கச் சென்றனர். தங்களது ராஜினாமா கடிதங்களைக் கொடுக்கவே அவர்கள் சென்றனர். ஆனால் அவர் ஊரில் இல்லை என்று கூறப்பட்டதால் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பினர். மேலும் கோபத்தில் கொந்தளித்த அவர்கள், தங்களது ராஜினாமா கடிதத்தின் நகல்களை ஆளுநர் பரத்வாஜுக்கு அனுப்பி வைத்தனர்.
இதை பரத்வாஜும் உறுதி செய்துள்ளார். 13 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடித நகல்கள், எதியூரப்பா மற்றும் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்களிடமிருந்து தனக்கு வந்து சேர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
பரத்வாஜ் மேலும் கூறுகையில், என்னை முதல்வர் ஷெட்டர் இன்று சந்திப்பார் என்று கருதுகிறேன். அப்படி அவர் சந்திக்கும்போது அரசுக்குப் பெரும்பான்மை பலம் உள்ளதா என்பது குறித்து அவரிடம் கேட்பேன். தேவைப்பட்டால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்வேன்.
நான் ஷெட்டரையும், உள்துறை அமைச்சரையும், துணை முதல்வர் அசோக்கையும் தொடர்பு கொண்டு அரசியல் நிகழ்வுகள் குறித்து கேட்டுள்ளேன், விளக்கம் தருமாறும் கூறியுள்ளேன்.
எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி நான் செயல்பட்டு வருகிறேன். எனவே இது மிகப் பெரிய ஒரு பணி. அனைத்தும் முறைப்படி நடைபெறும். நான் சபாநாயகருடன் பேச முடியாது. அவர் சுயேச்சையானவர். மேலும் அவர் ஊரிலும் இல்லை. அரசுடன மட்டுமே நான் பேச முடியும் என்றார் பரத்வாஜ்.
225 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் பாஜகவுக்கு 117 உறுப்பினர்கள் உள்ளனர். மெஜாரிட்டிக்கு 113 பேர் தேவை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை 71 பேர் உள்ளனர். மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 26 பேர் உள்ளனர். 7 பேர் சுயேச்சைகள். 2 காலியிடம் உள்ளது. ஒருவர் நியமன உறுப்பினர் ஆவார்.
எதியூரப்பா தனிக் கட்சி தொடங்கிய பின்னர் தற்போது பாஜகவை உடைக்க ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால்.. ஊர்ந்து ஊர்ந்து போன எடப்பாடிக்கு? விட்டு விளாசிய உதயநிதி -
எடப்பாடி பழனிசாமி பட்டபாடெல்லாம் போச்சா? தவெக மூலம் தொங்கு சட்டசபை? கிங் மேக்கர் ஆக துடிக்கும் பாஜக -
தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக.. புதிய தேர்தல் சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! -
118-க்கு செக் வைக்கும் பாஜகவின் 130 கணக்கு! ஒரே கல்லில் 2 மாங்கா.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்குதா தாமரை -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
சீனியர்களை கழற்றிவிடும் பாஜக? தமிழகத்தில் புதுமுகங்களை களமிறக்க திட்டம்.. பின்னணியில் 3 காரணம் -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு?











Click it and Unblock the Notifications