40 தொகுதிகளிலும் அதிமுகவைத் தோற்கடிப்போம்: விஜயகாந்த்

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் தேமுதிகவின் 8வது செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
இதையடுத்துப் பேசிய விஜய்காந்த், கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை எனக்கு வழங்கி உள்ளீர்கள். அதற்காக நன்றி தெரிவிக்கிறேன். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருஷம் உள்ளது. இப்போதே கூட்டணி பற்றி எதுவும் சொல்ல முடியாது.
இப்போதைக்கு கட்சிப் பணி முதன்மையாக இருக்க வேண்டும். பூத் கமிட்டி அமையுங்கள். கொடி பறக்காத ஊர்களே இல்லாத நிலையை உருவாக்குங்கள். கரை வேஷ்டியை கட்டினால் மட்டும் போதாது. கட்சி பணி முதலில் இருக்க வேண்டும்.
மதுவைக் கொண்டு வந்து இளைஞர்களை குடிக்க வைத்து மக்களை இந்த அரசு கெடுத்து வருகிறது. ஒரு அரசாங்கம் என்றால் மக்களை வாழவைக்க வேண்டும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் இவர்களை விரட்டப் போகிறார்கள். மக்கள் புரட்சி வெடித்தால்தான் நாடு திருந்தும்.
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை நிர்வாகிகள் எனக்கு அளித்துள்ளனர். தேர்தலுக்கு இன்னும் ஓரு வருடம் உள்ளது. அதனால் இப்போது உடனே முடிவு எடுக்க முடியாது. அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக 2016ம் ஆண்டு வரப் போகும் சட்டமன்றத் தேர்தலை நாம் பலியிட முடியாது. இதை மனதில் வைத்தே எந்த முடிவையும் எடுக்க வேண்டும்.
அதிமுகவில் தேமுதிகவினரைச் சேர்த்துக் கொள்கின்றனர் என்றால் தேமுதிக செல்வாக்குடன் இருக்கிறது என்றுதானே அர்த்தம். திமுகவும் அதன் கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என்று விரும்புவதாகச் சொல்லப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவின் ஆதரவுடன் வெற்றிபெறவில்லை என்று அதிமுகவினர் இப்போது கூறுகின்றனர். சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ள பலர் அப்போது எப்படியெல்லாம் என்னிடம் கெஞ்சி பிரசாரத்துக்கு அழைத்துச் சென்றனர் என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதனை மரியாதை நிமித்தம் கருதி வெளியிட விரும்பவில்லை.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக அரிவாள் வைத்து வெற்றி பெற்றது என்றால், அதிமுக அதிகாரிகளால் வெற்றி பெற்றது.
ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் அதுபோல செய்ய முடியாது. 40 தொகுதிகளிலும் அதிமுகவைத் தோற்கடிப்போம். தேமுதிகவால் வெற்றி பெறவில்லை என்று சொல்பவர்கள் இந்தச் சவாலை ஏற்கட்டும்.
ஜெ. குற்றச்சாட்டு தவறு...
தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனபான்மையுடன் செயல்படுவதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்த புதிதில் டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தான் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டதாகவும், மத்திய நிதி ஆணையம் தமிழகத்துக்கு தேவையான நிதியைத் தந்ததாகவும் முதல்வர் ஜெயலலிதா கூறினார். இப்போது மட்டும் மத்திய அரசு எப்படி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்க முடியும்?.
கிராமப்புறங்களில் 16 மணி நேரம் மின்வெட்டு உள்ளது. வெயில் காலத்தில் இது இன்னும் அதிகரிக்கும். மின்வெட்டைப் போக்க அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்போது திமுகவை நான் தாக்கிப் பேசாமல் இருக்கலாம். ஆனால் திமுக ஆட்சியில் இருந்தபோது திமுகவைத் தாக்கி, திட்டிப் பேசியுள்ளேன். என்னுடைய கல்யாண மண்டபத்தை இடித்தது போன்ற கோபதாபங்கள் திமுக மீது இப்போதும் எனக்கு உண்டு.
ஆனால் இப்போது அதிமுக ஆட்சியில் உள்ளதாலேயே அதனை எதிர்க்கிறேன்.
என்னை தடுக்க அதிமுக, திமுக இரண்டு பக்கமும் சதி நடக்கிறது. நான் தெய்வத்துடனும், மக்களுடனும்தான் கூட்டணி என்று சொல்லிவிட்டேன். தொண்டர்கள் இருக்கும் தைரியத்தில் நான் பேசுகிறேன் என்றார் விஜயகாந்த்.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
- காவிரியில் போதிய நீர் கிடைக்காததால் காவிரி பாசன பகுதியை சேர்ந்த விவசாயிகள் 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், அவர்கள் குடும்பத்தினரின் வாழ்வுரிமைக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவிரிப் பாசன விவசாயிகளின் துயர் துடைக்க ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் மின்வெட்டுக்கு காரணமான அ.தி.மு.க. அரசை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
- தமிழ்நாட்டின் வறட்சி பகுதிகளை உடனடியாக கண்டு ஆராய்ந்து, வறட்சி பகுதி என்று அறிவித்து அதற்குரிய நிவாரண பணிகளை உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டும்.
- தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வேண்டும் என்றே அவதூறு வழக்குகள் தொடுத்து இருப்பதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. அவர் மீது பொய்யாக தொடுக்கப்பட்டிருக்கும் அவதூறு வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
- தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக சாதி மோதல்கள் அதிகமாகி வருகின்றன. இதனால், சமூக ஒற்றுமை குலைந்து வருகிறது. இதனை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
- டெல்லியில் நடைபெற்ற பாலியல் பலாத்காரத்தை போல, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் நடைபெற்ற சம்பவத்தை நாம் அறிவோம். இந்த படுபாதகமான நிலையை மாற்ற கடுமையான தண்டனை வழங்கும் வகையில் உரிய சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்.
தேமுதிக பொருளாளராக இளங்கோ நியமனம்:
தேமுதிக பொருளாளராக இருந்த சுந்தர்ராஜன் 4 தேமுதிக எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதிப் பிரச்சனை தொடர்பாக என்று கூறிக் கொண்டு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்கள். இதனால், அவர்கள் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டனர்.
நேற்று நடந்த தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந் நிலையில், நேற்றைய கூட்டத்தில், தேமுதிக பொருளாளராக கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஏ.ஆர்.இளங்கோ அறிவிக்கப்பட்டார்.
-
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி முதல் கல்வி கடன் ரத்து வரை! 2021ல் திமுக, அதிமுக கொடுத்த வாக்குறுதிகள்! -
அதிமுக அஸ்திவாரத்தில் கை வைத்த பாஜக.. அமித்ஷா புள்ளி வைக்க.. தினகரன், அன்புமணி கோலம் போட.. என்னாச்சு -
டிபன்டர் காருடன் போஸ் கொடுத்த.. பிரேமலதா! திமுகவுக்கு தேவையில்லாத ஆணி.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications