துப்பறியும் நிறுவன தம்பதி.. 2வது திருமணம்.. துப்பறிந்த மனைவி.. அதிபர் கைது-2வது மனைவியும் புகார்!

அதே போல தன்னை ஏமாற்றித் திருமணம் செய்த கணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரண்டாவது மனைவியும் போலீசில் புகார் தந்துள்ளார்.
சென்னை தாம்பரத்தில் ஸ்டார் டிடக்டிவ் ஏஜென்ஜி என்ற துப்பறியும் நடத்தி வரும் தம்பதி டேவிட்-ஜெமீனா. இவர்களுக்கு 2006ம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்களிடம் வழக்கமாக கணவர் மீது சந்தேகம் கொண்ட மனைவியோ அல்லது மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவரோ தங்களது கணவர், மனைவியின் நடவடிக்கைகளை துப்பறிந்து சொல்லுமாறு கோருவது வழக்கம். இதில் வழக்கமாக டைவர்சுக்கான ஆதாரங்களை இந்த நிறுவனம் கலெக்ட் செய்து தரும்.
அதே போல திருமணம் செய்யப் போகும் பெண்ணின் பெற்றோர் அல்லது மாப்பிள்ளையின் பெற்றோர் மணமகன், மணமகள் குறித்த தகவல்களை துப்பறிந்து சொல்லுமாறு கேட்பதும் வழக்கம்.
இதற்காக பயிற்சி பெற்ற ஆண், பெண் துப்பறியும் நிபுணர்களை வைத்து இவர்கள் தங்களது கஸ்டமர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
இந் நிலையில் ஜெமீனா-டேவிட் இடையே சில காலமாக பிரச்சனை இருந்து வந்தது. இதையடுத்து டைவர்ஸ் கோரி நீதிமன்றத்தை நாடினார் ஜெமீனா. ஆனால், டைவர்ஸ் தர மறுத்துவிட்ட நீதிமன்றம் இருவரையும் சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தியது.
இதற்கிடையே ஜெமீனாவுக்குத் தெரியாமல் டேவிட் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். டேவிட் பெரும்பாலான நாட்கள் நெடு நேரம் வெளியே போய்விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் அவர் மீது சந்தேகமடைந்த ஜெமீனா தனது துப்பறியும் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரைக் கொண்டே டேவிட்டின் நடவடிக்கைகளை கண்காணித்துள்ளார்.
இதில், குன்றத்தூரைச் சேர்ந்த ஜூடி என்ற பெண்ணை டேவிட் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இரு குழந்தைகளுக்குத் தாயான, விதவையான ஜூடி மறுமணம் செய்வதற்காக மாப்பிள்ளை தேடி பத்திரிக்கையில் விளம்பரம் தந்துள்ளார். இதையடுத்து டேவிட் அவரை அணுகி தான் டைவர்ஸ் பெற்றவன் என்று கூறி, ஜூடியைத் திருமணம் செய்துள்ளார்.
முன்னதாக நீதிமன்றம் டைவர்ஸ் தர மறுத்து கொடுத்த உத்தரவின் நகலைத் திருத்தி, டைவர்ஸ் பெற்றது போல காட்டி ஜூடியை ஏமாற்றியுள்ளார் டேவிட்.
இந் நிலையில் பொங்கலுக்கு முதல் நாள் தனது உடமைகளை எடுத்துக் கொண்டு, ஜெமீனாவிடமும் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார் டேவிட்.
இதையடுத்து தனது கணவர் தன்னை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டதாகவும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி பீர்கன்கரை காவல் நிலையத்தில் ஜெமீனா புகார் தந்தார். தனது துப்பறியும் நிறுவனம் மூலம் சேகரித்த தகவல்களையும் அவர் போலீசாரிடம் ஆதாரமாகத் தந்தார்.
இந்த வழக்கை விசாரித்த போலீசார் பின்னர் இந்த வழக்கை தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றினர். அங்கு, டேவிட்டும் ஜூடியும் இணைந்து வாழ்ந்து வருவதற்கான ஆதாரங்களையும், டேவிட்-ஜூடியின் தொலைபேசி அழைப்பு விவரங்களையும் ஆதாரமாகத் தந்தார் ஜெமீனா.
இதைத் தொடர்ந்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் டேவிட்டை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந் நிலையில் தான் டைவர்ஸ் பெற்றவன் என்று சொல்லி தன்னை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்ட டேவிட் மீது ஜூடியும் போலீசில் புகார் கொடுத்துள்ளார். நீதிமன்ற ஆவணங்களைத் திருத்தி தன்னை ஏமாற்றிய டேவிட் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜூடி கோரியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications