விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது: பாலக்காட்டு தியேட்டர்களை மூட வைத்த சிபிஎம் இளைஞரணி
திருவனந்தபுரம்: விஸ்வரூபம் ஓடவில்லை என்றால் வேறு எந்த படமும் ஓடக் கூடாது என்று கூறி பாலக்காட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூட வைத்துள்ளது சிபிஎம் இளைஞர் அணியான இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு.
விஸ்பரூபம் திட்டமிட்டபடி கடந்த 25ம் தேதி கேரளாவில் தான் ரிலீஸ் ஆனது. இதனால் படத்தைப் பார்க்க தமிழக ரசிகர்கள் அங்கு சென்றனர்.
ஆனால் கேரளாவிலும் விஸ்வரூபத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் படம் தியேட்டர்களில் ஓடுகிறது என்று போலீசார் தெரிவித்தனர். விஸ்வரூபம் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பாலக்காட்டில் உள்ள ஒரு தியேட்டர் விஸ்வரூபம் படத்தை ரத்து செய்தது. இதனால் ஆத்திரமடைந்த சிபிஎம் இளைஞர் அணியான இந்திய ஜனநாயக கூட்டமைப்பினர் கமல் படம் ஓடவில்லை என்றால் எந்த படமும் ஓடக் கூடாது என்று கூறி பாலக்காட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூடச் செய்தனர்.
இதற்கிடையே எர்ணாகுளம், இடுக்கி மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் விஸ்வரூபம் படத்தை திரையிட ஒரு சில இடங்களில் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் மாநிலம் முழுவதும் சில முஸ்லிம் அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தின.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications