டீசல் நிரப்ப பெட்ரோல் பங்குகளில் குவிந்த அரசு பஸ்கள்...!

தமிழகத்திலுள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் மொத்தம் 21,800 பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் 2 கோடியே 10 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர்.
போக்குவரத்து கழகங்களில் நாளொன்றுக்கு 19 லட்சத்து 65 ஆயிரத்து 333 லிட்டர் டீசல் பயன்படுத்தப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் டீசல் லிட்டருக்கு ரூ.5.63 உயர்த்தப்பட்டதால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டுக்கு ரூ.300 கோடி கூடுதல் செலவானது.
அடுத்த அடியாக கடந்த 18ம் தேதி டீசல் விலை 50 பைசா உயர்த்தப்பட்டது. அதேநேரம் ரயில் மற்றும் அரசு போக்குவரத்து துறைக்கு சப்ளை செய்யப்படும் டீசல் விலையை ரூ.11.87 பைசாவாக மத்திய அரசு உயர்த்தியது. இதனால், தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டுக்கு ரூ.750 கோடி கூடுதல் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இரட்டை டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா இந்த இரட்டைநிலைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதேபோல அரசு நிறுவனங்களுக்கு வழங்கும் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியும் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், கூடுதல் செலவை கட்டுப்படுத்த, அரசு போக்குவரத்து கழகங்களின் 300க்கும் மேற்பட்ட பணிமனைக்கு அருகில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்குகளில் டீசல் வாங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன் மூலம் போக்குவரத்து கழகங்கள் ஒரு லிட்டருக்கு ரூ.10.41 பைசா சேமிக்க முடியும்.
மத்திய அரசு விலைப்படி அரசு நிறுவனங்களுக்கு வழங்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.60.95. தனியார் பெட்ரோல் பங்க்குகளில் டீசல் லிட்டர் ஒன்று ரூ.50.54 பைசாவுக்கு விற்பனையாகிறது. இதைத்தான் தற்போது அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வாங்க ஆரம்பித்துள்ளன.
காலை முதல் இரவு வரை பெட்ரோல் பங்க்குகளில் பொது மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை அரசு பஸ்களுக்கு தனியார் பங்க்குகளில் டீசல் போடப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை தாம்பரம், வடபழனி, மாதவரம், கே.கே.நகர், அம்பத்தூர், தண்டையார் பேட்டை, அடையார் உள்ளிட்ட 25 டெப்போக்களின் அருகில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்குகளில் டீசல் வாங்கப்படுகிறது.
இதற்காக ஒவ்வொரு பெட்ரோல் பங்க் ஓரமும் அரசு பஸ்கள் இரவில் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. டீசலுக்கான பணத்தை உடனுக்குடனும், ஓரிரு நாட்களில் வழங்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் இப்படி அரசு பஸ்களுக்கு தனியார் பெட்ரோல் பங்க்குகளில் டீசல் வாங்குவதால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது என்று தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, அரசு போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
மறுபக்கம் பொதுமக்கள் தரப்பில் வேறு பயம் கிளம்பியுள்ளது. அரசுப் பேருந்துகளுக்கு முதல் நாளிலேயே பெருமளவிலான டீசலை வாங்கி விட்டால் ஆட்டோக்கள், வேன்கள், கார்களுக்கு டீசல் போதாமல் அவை திண்டாட வேண்டிய நிலை ஏற்படுமே என்று அவர்கள் அச்சப்படுகிறார்கள்.
-
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
Vijay: வதந்திகளுக்கு பதிலடி! ஷாலினியுடன் சங்கீதா.. அஜித் வீட்டில் விஜய்! லீக்கான வீடியோ -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி? -
Vijay Trisha: ஜோடியாக வந்த விஜய் திரிஷா.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி.. ஒரே காரில் வந்து பங்கேற்பு -
சங்கீதா விஷயத்தை விட பெரிய சிக்கல்.. அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே.. புலம்பி கொட்டிய விஜய் -
உலகின் முன்னணி சரக்கு கப்பல் நிறுவனம் வெளியிட்ட அலர்ட்! மொத்த உலகமும் ஸ்தம்பிக்கப்போகுது! -
ராஜ்யசபா எம்.பியாகும் அன்புமணி.. மிக இளம் வயது கேபினட் அமைச்சர் - அட்டெண்டென்ஸ் சர்ச்சை.. யார் இவர்? -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
மண்டமேல இருந்த கொண்டைய மறந்த ஓபிஎஸ்.. கேட்ல இருந்த இரட்டை இலைய எடுத்தீங்களே! வீடு? விளாசிய விந்தியா!












Click it and Unblock the Notifications