காணாமல் போன மீரா குமாரின் மாமன் மகள் கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil

மீராகுமாரின் மாமன் மகள் பிரியங்கா குமார். 22 வயதான இவர் மன நலம் பாதிக்கப்பட்டவர். உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவரும் கூட. இவர் ஜனவரி 26ம் தேதி அருகில் உள்ள கம்ப்யூட்டர் பயிற்சி மையத்திற்கு பயிற்சிக்காப் போயிருந்தார். ஆனால் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். பிரியங்காவைத் தேடும் பணியில் போலீஸார் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் கான்பூர் ரயில் நிலையத்தில் வைத்து பிரியங்காவை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவர் டெல்லி செல்லும் ரயிலிலிருந்து இறங்கியபோது போலீஸார் அவரை கண்டுபிடித்தனர்.
தற்போது பிரியங்கா குமார் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications