காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் கைவிரிப்பு

தமிழகத்தில் கருகும் சம்பா பயிரைக் காப்பற்ற 12 டி.எம்.சி. நீரையாவது கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசு மற்றும் எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதை தெரிவிக்காத காவிரி கண்காணிப்புக் குழு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் 1992ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு பயன்படுத்திய தண்ணீர் எவ்வளவு, நடுவர் மன்றம் அனுமதித்த தண்ணீர் எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந் நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் லோத்தா, செலமேஸ்வர் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிட முடியாது. இதனை பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்திடம் தமிழகம் முறையிடலாம் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
முன்னதாக கர்நாடக அணைகளில் குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் உள்ளதாகவும், இதனால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீர் கூட தர முடியாது என்றும் கர்நாடக வழக்கறிஞர் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி -
தனியாக வாழும் தம்பதிகள்.. உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழக்குகள் தொடர்பாக முக்கியமான தீர்ப்பு -
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தகுதி அரசு வேலைகள்.. தமிழக வங்கி வழக்கில் உச்ச நீதிமன்றம் மேஜர் தீர்ப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி












Click it and Unblock the Notifications