குமரி மாவடத்தில் ஆயிரக்கணக்கானோரை முடக்கிய சிக்குன் குனியா
குமரி: குமரி மாவட்டத்தில் சிக்குன் குனியாவால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் குக்கிராமங்களில் இருந்து நகர்புறம் வரை சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அவைரையும் டெங்கு தொற்றிக்கொள்ளும் அபாய நிலை உள்ளது. இது தவிர வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிக்குன் குனியா, டெங்கு போன்ற வைரஸ் வியாதிகளால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது. இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்படும்போது பொருளாதார பலம் இல்லாத பலரும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். சுகாதாரத்துறை சார்பில் கொசுத் தொல்லையை ஒழிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த வியாதிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது. சிக்குன் குனியா, வைரஸ் கிருமிகளால் பரவுவதால் அதற்கென்று தனியாக மருத்துவம் கிடையாது. அதே நேரம் நிலவேம்பு, பப்பாளி இலை கசாயம் குடிப்பதால் மனிதனுடைய எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் அணுக்கள் அதிகமாகி தேகத்தின் வியாதி எதிர்ப்புத்தன்மை அதிகரித்து சிக்குன் குனியா தாக்காமல் இருக்குமென்றும் சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நிலவேம்பு கசாயம் மருத்துவமனைகளில் கொடுக்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு கசாயத்தை அருந்தி இந்த வியாதிகளிலிருந்து விடுபட மக்கள் முயற்சி செய்கின்றனர். காய்ச்சலின் தாக்கத்தில் இருந்து விடுபட திருவனந்தபுரம் வரை சென்று பலர் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டனர். மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிக்குன் குனியா தாக்கப்பட்டவர்கள் அதன் பின்விளைவுகளான முட்டுவலி, கால்வீக்கம், கைவீக்கம், உடம்புவலி, கை கால் உளைச்சல், நடக்க முடியாத நிலை, காலை கடன்களை கழிப்பதற்கு கூட முடியாமல் தவிக்கின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications