இந்திய வீரர் ஹேமராஜ் தலையை துண்டித்தவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கிய ஐ.எஸ்.ஐ!!!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய வீரர் ஹேம்ராஜை படுகொலை செய்து அவரது தலையை துண்டித்த பாகிஸ்தான் தீவிரவாதிக்கு ரூ5 லட்சம் பரிசுத் தொகையை அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. வழங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இந்திய வீரர்கள் ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் சிங் ஆகியோர் கோரமாக படுகொலை செய்யப்பட்டனர். மேலும் இந்திய வீரர் ஹேம்ராஜின் தலையை துண்டித்தும் எடுத்து சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற லஷ்கர் இ தொய்பாவினருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
பின்னர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி ரணுவத்தினராலேயே இந்த படுகொலை செய்யப்பட்டதாகவும் இதற்கு சுபேதார் ஜாபர்கான் என்பவரே பொறுப்பு வகிததாகவும் தகவல் வெளியானது.
தற்போது லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதி அன்வர்கான் என்பவர்தான் ஹேம்ரஜின் தலையை துண்டித்ததாகவும் அன்வர்கானுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ரூ5 லட்சம் பரிசுத் தொகை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications