மதுரையில் பயங்கரம்... மு.க.அழகிரியின் வலதுகரம் பொட்டு சுரேஷ் வெட்டிக் கொலை!

அழகிரியின் தீவிர விசுவாசியும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்தவர் பொட்டு சுரேஷ். இவர் இன்று இரவு மதுரையில் அழகிரி இருக்கும் வீட்டு பக்கத்தில் சத்யசாய் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் வெட்டிக் கொன்றது யார் என்பது தொடர்பாக மதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
யார் இந்த பொட்டு சுரேஷ்?
திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் என்றாலும் பொட்டு சுரேஷ், அழகிரியின் அதி தீவிர விசுவாசியாக இருந்தவர். தொடக்க காலங்களில் சாலையோரங்களில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்து பின்னர் மறைந்த சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனுடன் நெருக்கமாக இருந்தார். கடந்த சில ஆண்டுகாலமாக மு.க. அழகிரியின் அதிதீவிர விசுவாசியாக இருந்து வந்தார்.
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நில அபகரிப்பு வழக்கில் பொட்டு சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. ஆனால் தம் மீதான குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்து ரத்து செய்ய வைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் தாம் அரசியலைவிட்டு ஒதுங்குகிறேன் என்று கூட கூறினார். ஆனால் கடந்த ஒரு மாதகாலமாக மீண்டும் அழகிரியுடன் ஐக்கியமாகி இருந்தார் பொட்டு சுரேஷ்.
கொலையாளிகள் யார்?
திமுக ஆட்சிக் காலத்தில் பொட்டு சுரேஷ் தென் தமிழகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பொட்டு சுரேஷை கொல்ல கூலிப்படை ஏவியது யார் என்பது மர்மமாக இருந்து வருகிறது.
இது தொழில் போட்டியால் நடந்ததா? அல்லது பொட்டு சுரேஷை பிடிக்காத திமுகவினரின் சதியா? என்பது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications