சென்னையில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர்
சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் காதலை ஏற்க மருத்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆதம்பாக்கம் திருவள்ளூவர் சாலையில் உள்ள ஸ்ரீ இணையதள மையத்தில் ஒன்றில் பணியாற்றி வந்த அந்த இளம்பெண்ணிடம் அதே பகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் என்பவர் காதலிப்பதாக கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்த வந்த விஜயபாஸ்கர், காதலை ஏற்க மறுத்த பெண் மீது கோபமடைந்தார். நேற்றைய தினம் அந்த பெண் வேலை பார்க்கும் இணையதள மையத்திற்கு வந்த விஜயபாஸ்கர் திடீரென அந்த பெண் மீது ஆசிட்டை வீசியுள்ளார்.
இதில், அந்த பெண்ணின் முகம், முதுகு மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்தன. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.
இதையடுத்து, விஜயபாஸ்கர் மீது ஆதம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட விஜயபாஸ்கர் பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் கேன்டீன் பிரிவில் பணியாற்றி வருகிறார். அவர் பாரிமுனைப் பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து ஆசிட் வாங்கியதாக கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் காரைக்காலில் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் வினோதினியின் நினைவுகள் கூட நம் மத்தியில் இன்னும் மறையவில்லை. நேற்றுதான் தான் அவர் தாக்கப்பட்ட வழக்கில் காரைக்கால் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் அதேபோன்று ஒரு கொடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications