2 ஐ.ஜி., 3 டி.ஐ.ஜி.க்கள் திடீர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
சென்னை: தமிழக காவல் துறையில் 2 ஐ.ஜி.க்கள், 3 டி.ஐ.ஜி.க்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல தலைமை விழிப்புப் பணி அலுவலராக இருந்த வன்னியப் பெருமாள் சென்னை மாநில குற்ற ஆவண காப்பக பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல தலைமை விழிப்புப் பணி அலுவலராக இருந்த பாலசுப்பிரமணியன் சென்னை நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த எம்.சி. சாரங்கன் சென்னை தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல தலைமை விழிப்புப் பணி அலுவலர் பாரி சென்னை சமூக நீதித்துறை டி.ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருவண்ணாமலை மண்டல தலைமை விழிப்புப் பணி அலுவலர் பணியில் இருந்த மெளரியா சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
இதேபோல நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்புப் படை கண்காணிப்பாளராக மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications