சிரியா மீது இஸ்ரேல் விமான தாக்குதல்.. இஸ்ரேலுக்கு சிரியா- ஈரான் எச்சரிக்கை!
பெய்ரூட்: தங்கள் மீது திடீரென தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி தரப்போவதாக சிரியா அறிவித்துள்ளது. இதேபோல் சிரியா மீதான தாக்குதலுக்கு தமது நாடும் பதிலடி கொடுக்கும் என்று ஈரானும் எச்சரித்துள்ளது.
சிரியாவில் கடந்த 2 ஆண்டுகாலமாக உள்நாட்டு கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்குமான யுத்தம் தொடர்ந்தும் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே ஜாம்ராயா என்ற இடத்தில் செயல்பட்டு வந்த அந்த நாட்டின் ராணுவ ஆராய்ச்சி மையம் மீது குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியிருக்கிறது அண்டை நாடான இஸ்ரேல். இதில் இருவர் பலியாகினர். இதுநாள் வரை லெபனான் மீது தாக்குதல் நடத்திக் கொண்டு ஈரானை மிரட்டிக் கொண்டு இருந்த இஸ்ரேல் தற்போது சிரியா மீது தாக்குதல் நடத்தியிருப்பது அப்பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு சிரியாவின் ஆயுதங்கள் கடத்தப்படுவதாலேயே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக சிரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவுக்கு ஆதரவாக தமது நாடும் தாக்குதல் நடத்தும் என்று ஈரானும் அறிவித்திருக்கிறது.
ஐ.நா. சாசனத்துக்கு எதிராக இஸ்ரேல் நடத்தியிருக்கும் தாக்குதலை ரஷியாவும் கடுமையாக கண்டித்திருப்பது. ஆனால் அமெரிக்காவோ ஹிஸ்புல்லா தீவிரவாதிகளிடம் ஆயுதங்கள் கைமாறாமல் இருக்க சிரியா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications