விருதுநகரில் இருந்து திண்டுக்கல்லுக்கு 'சுற்றி சுற்றி' போன டாக்டர் ராமதாஸ்!!
திண்டுக்கல்: மதுரை, ராமதநாதபுரம் மாவட்டங்களுக்குள் நுழைய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் வேறு வழியே இல்லாமல் சுற்றி சுற்றி திண்டுக்கல்லுக்குள் நுழைந்திருக்கிறார்.
அண்மைக்காலமாக சாதிய அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி தலித்துகளை விமர்சிப்பதும் சாதி மறுப்பு திருமணங்களை எதிர்ப்பதுமாக பேசி வருகிறார் டாக்டர் ராமதாஸ். இதற்காகவே இவர் ராமதநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பல மாவட்டங்களில் நுழைய தடை கோரி மனுவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் விருதுநகரில் சாதிய தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் ராமதாஸ். சாலை வழியே சென்றால் மதுரையை தாண்டி செல்ல வேண்டிய நிலை என்பதால் தூத்துக்குடிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் போய் பின்னர் அங்கிருந்து காரில் விருதுநகர் சென்றார். விருதுநகர் கூட்டத்தை முடித்துவிட்டு திண்டுக்கல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
விருதுநகரில் இருந்து எளிதாக திண்டுக்கல் போக வேண்டுமெனில் எப்படியும் மதுரை மாவட்ட எல்லையைத் தொட்டே ஆக வேண்டும். இதற்காக திண்டுக்கல் செல்வதற்காக மட்டும் அனுமதி கோரி நீதிமன்றத்திலும் மதுரை ஆட்சியரிடமும் பாமகவினர் மனு கொடுத்தனர். ஆனால் உரிய பதில் கிடைக்கவில்லை.
மதுரை, கள்ளிக்குடி, திருமங்கலம், சமயநல்லூர் 4 வழிச்சாலை வழியாக சென்றால் எளிதாக திண்டுக்கல் சென்றுவிடலாம். ஆனால் அனுமதிதான் கிடைக்கவில்லையே. இதனால் ராமதாஸ் அப்படி ஒரு சுற்று சுற்றி திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.
விருதுநகரில் இருந்து திண்டுக்கல்லுக்கு எப்படி ராமதாச் 'சுற்றி சுற்றி' போனார்? விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி, துவரங்குறிச்சி, வடமதுரை வழியாக திண்டுக்கல் சென்றடைந்திருக்கிறார். அதாவது விருதுநகர் மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்கள் வழியாக திண்டுக்கல் மாவட்டத்துக்குப் போயிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications