தமிழகத்துக்குள் நுழைய முயற்சி- வாட்டாள் நாகராஜை கைது செய்தது கர்நாடகா!
கோபி: தமிழக எல்லையான தாளவாடிக்குள் நுழைய முயன்ற கன்னட சாலூவாலியா பட்சா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜை கர்நாடகா போலீஸ் கைது செய்துள்ளது.
விபத்து
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி தொட்டகஞ்சனூரில் டிவைன் மெட்ரிக்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் சந்தியா மற்றும் குஷ்மு ஆகியோர் கடந்த 7-ந் தேதி பள்ளி முடிந்து வெளியேறினர். அப்போது பள்ளிக்கூட வளாகத்தில் டேவிட், லூர்து என்ற இருவரும் வாகனம் ஓட்டிப் பழகினர். அவர்களது வாகனம் மாணவிகள் மீது மோதியதில் சந்தியா சம்பவ இடத்தில் பலியானார்.
கலவரம்- கர்நாடாகவினர் கைது
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் வன்முறை வெடித்தது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தாக்குதலுக்குள்ளாகின. இந்தத் தாக்குதலில் இருந்து காவல் நிலையம் மற்றும் மருத்துவமனையும் தப்பவில்லை. இதைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் சிவசங்கரன் உட்பட மொத்தம் 61 பேரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
தாளவாடியில் ஆர்ப்பாட்ட அறிவிப்பு
கைது செய்யப்பட்டோரில் பெரும்பாலானோர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். இவர்களை விடுவிக்கக் கோரி தமது அமைப்பின் சார்பில் தமிழக எல்லைப் பகுதியான தாளவாடியில் வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்திருந்தார்.
தாளவாடியில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று சத்தியமங்கலம் டி.எஸ்.பி., முத்துசாமி மற்றும் தாசில்தார் கண்ணப்பன் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பினர். இதை ஏற்று விசாரணை நடத்திய கோபி வட்டாட்சியர் பழனிச்சாமி, வாட்டாள் நாகராஜ் அமைப்பினர் தமிழக எல்லைக்குள் நுழைய ஒரு மாத கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை தாளவாடி போலீசார் வாட்டாள் நாகராஜிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் தமது உத்தரவில் தெரிவித்திருந்தார். மேலும் அப்பகுதியில் 144 தடை உத்தரவும் போடப்பட்டது.
நுழைய முயற்சி
இந்நிலையில் இன்று தாளவாடியில் தமிழக எல்லையான பார்வதிபுரம் அருகே தனது ஆதரவாளர்களுடன் வாட்டாள் நாகராஜ் தமிழகத்துக்குள் நுழைய தயாராக இருந்தார் அப்போது அங்கு கர்நாடக போலீசார் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications