ஆதிபகவன் படத்தை தடை செய்ய கிராம பூசாரிகள் பேரவை கோரிக்கை!
Subscribe to Oneindia Tamil

கிராம பூசாரிகள் பேரவையின் ஒன்றியக் செயற்குழு கூட்டம், கரூர் அருகே உள்ள அரவக்குறிச்சியில், ஒன்றிய அமைப்பாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், விசுவஹிந்து பரிஷத்தின் இந்து மறுமலர்ச்சி மாநாடு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதில், 1000 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பது என்றும், கிராம கோவில்களை சீரமைக்க, அறநிலையத்துறை சார்பில், 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இதை, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், சிறுபான்மை உலமாக்களுக்கு, 2,500 ரூபாய் வழங்குவதை போல, கிராம பூஜாரிகளுக்கும் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இந்து தெய்வங்களை மற்றும் மதத்தை புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஆதிபகவன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர்.












Click it and Unblock the Notifications