தெலுங்கானா குறித்து உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயுடன் ஆந்திர முதல்வர் இன்று ஆலோசனை
டெல்லி: தனி தெலுங்கானா மாநிலம் தொடர்பாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயுடன் ஆலோசனை நடத்துவதற்காக ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்.
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக கடந்த 28-ந் தேதி இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசோ இறுதி முடிவெடுப்பது தாமதமாகும் என்று அறிவித்தது. மேலும் ஆந்திர மாநில முதல்வருடனும் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியது.
பின்னர் ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டியையும் மாநில காங்கிரஸ் தலைவர் சத்யநாராயணாவையும் டெல்லிக்கு வருமாறு கட்சி மேலிடம் அழைத்தது. இதைத் தொடர்ந்து டெல்லியில் தற்போது முகாமிட்டிருக்கும் இருவரும் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் ஆந்திர மாநில பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத்தை சந்திக்கின்றனர். பின்னர் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவை கிரண்குமார் ரெட்டி சந்தித்துப் பேச இருக்கிறார்.












Click it and Unblock the Notifications