ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: பிப்ரவரி 18-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பிப்ரவரி 18-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இந்த வழக்கில் 4 பேரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்களும் பெறப்பட்டுவிட்டன. அடுத்த கட்டமாக சாட்சிகளின் விசாரணை நடைபெற வேண்டும்.
இந்த வழக்கில் தமக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகக் கூறி அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ந் தேதி அறிவித்தார். அவர் அறிவித்த போடும் அவருக்குப் பதில் சந்தேஷ் சவுடா ஆஜராகி வழக்கை நடத்தி வந்தார்.
இந்நிலையில் ஆச்சார்யாவின் ராஜினாமா கடந்த 17-ந் தேதியன்று கர்நாடகா அரசால் ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 21-ந் தேதி சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை. இந்நிலையில் கர்நாட்கா அரசு, புதிய அரசு வழக்கறிஞராக முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பவானிசிங்கை நியமித்தது.
இதைத் தொடர்ந்து இன்று காலை நீதிபதி பாலகிருஷ்ணா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தம்மை அரசு வழக்கறிஞராக நியமித்த உத்தரவை நீதிபதியிடம் பவானிசிங் தாக்கல் செய்தார். மேலும் வழக்கின் ஆவணங்களைப் படித்துப் பார்க்க 2 மாத கால அவகாசம் தேவை என்றும் அவர் கோரியிருந்தார்.
ஆனால் இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி 15 நாள் கால அவகாசம் கொடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 18-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications