கும்பமேளாவில் நித்தியானந்தா பஜனை பண்ணக் கூடாது ...உ.பியில் எதிர்ப்பு

அலகாபாத் நகரில் கும்பமேளா நடந்து வருகிறது.லட்சக்கணக்கானோர் குழுமியுள்ளனர். அதேபோல பாலியல் விவகார சர்ச்சையில் சிக்கிய நித்தியானந்தாவின் பக்தர்களும் அங்கு ஒரு கேம்ப் போட்டு தினசரி பூஜை செய்து வருகின்றனர். இன்று முதல் 10 நாட்களுக்கு நித்தியானந்தாவும் கேம்ப் போட்டு தினசரி பஜனை பண்ணப் போகிறாராம்.
இதற்கு அங்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து உ.பி. மாநில அரசு, கலெக்டர், உள்ளிட்டோருக்கு உ.பி. எம்.பிக்கள் சிலர் மனு அனுப்பியுள்ளனர். அதில், நிதித்யானந்தாவை கும்பமேளாவில் பங்கேற்க அனுமதித்தால், ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு பிரச்னை ஏற்படலாம். விவாதத்துக்கு உள்ளானவர்களை, கும்பமேளாவில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது.
நித்தியானந்தாவை, அரசு தரப்பில் தடுக்காவிட்டால், கும்ப மேளா ஏற்பாட்டாளர்கள் கமிட்டியே நடவடிக்கை எடுக்கும். நித்தியானந்தா கும்பமேளாவில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
ஏற்கனவே இப்படிப்பட்ட கும்பமேளாவின்போதுதான் தன்னை மிக மோசமான முறையில் சீரழித்தார் நித்தியானந்தா என்று அவரது முன்னாள் சிஷையை ஆர்த்தி ராவ் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். மேலும், அப்போதுதான் அவரது பாலியல் விவகாரம் குறித்து பிரச்சினை கிளம்பியது என்பதும் நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications