ராஜஸ்தான்.. பாஜக முதல்வர் வேட்பாளர் வசுந்தரராஜே சிந்தியா!

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகவில் நீண்டகாலமாக உட்கட்சி மோதல் நீடித்து வருகிறது. பாஜகவின் மாநிலத் தலைவராக கத்தாரியா இருந்து வந்தார். அவர் வசுந்தரராஜே சிந்தியாவை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா கட்சி பெரும் பிளவை சந்திக்க இருந்தது. வசுந்தரராஜே சிந்தியாவுடன் 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிடுவர் என்றும் கூறப்பட்டது.
ராஜஸ்தான் மாநில பாஜகவைப் பொறுத்தவரையில் வசுந்தராஜே சிந்தியா மட்டுமே தலைவர்- முதல்வர் வேட்பாளர் என்றே அவரது ஆதரவாளர்கள் முழங்கிவந்தனர். ஆனால் கத்தாரியா ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் பாஜகவின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற ராஜ்நாத்சிங் டெல்லியில் ராஜஸ்தான் மாநில பாஜக நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராக, முதல்வர் வேட்பாளராக வசுந்தரராஜே சிந்தியாவை அறிவித்தார். மேலும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக கத்தாரியாவையும் அவர் அறிவித்தார்.
இம்முடிவு குறித்து கருத்து தெரிவித்த வசுந்தரராஜே, கட்சித் தலைமையின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பாரதிய ஜனதா கட்சியினர் ஒரு குடும்பமாக இணைந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்வோம் என்றார்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications