மதுரை-துபாய் நேரடி விமான சேவை: அமைச்சர் நாராயணசாமியிடம் கோரிக்கை
நெல்லை: அமீரகத்தில் வாழும், தென் மாவட்ட மக்களின், நேரம், பணம் ஆகியவைகளை மிச்சப்படுத்துவது உட்பட, பல்வேறு வகையில் உதவிகரமான, துபாய்-மதுரை நேரடி விமான சேவையை, அமீரகத்தைச் சார்ந்த அனைத்து தமிழ் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக ஈடியே நிர்வாக இயக்குநர் அலுவலக மேலாளர் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ். மீரான், மத்திய கப்பல் போக்குவரத்து துறை ஆலோசகர் அமீர் கானின் இல்ல விழாவுக்காக நெல்லைக்கு வந்த பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமியை நேரில் சந்தித்து துபாய்- மதுரை நேரடி விமான சேவை தொடர்பான பணிகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை வைத்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் நாராயணசாமி, இது தொடர்பாக சென்ற ஆண்டு உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டிற்கு, அமீரகம் வந்த போது கொடுக்கப்பட்ட மனுவை நினைவு கூர்ந்ததுடன், இது சம்பந்தமாக மத்திய விமானத்துறை அமைச்சர் அஜீத் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், மேலும் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் புதிய வழித்தடங்கள் பட்டியலில் துபாய்-மதுரை விமான சேவையை இணைக்க, பிரதமர், மற்றும் மத்திய அமைச்சருடன் பேசுவதாகவும் உறுதியளித்தார்.

மத்திய அமைச்சருடனான இந்த சந்திப்பின் போது நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்புவும், மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்து துறை ஆலோசகர் அமீர்கான் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்களும் உடன் இருந்தனர்.













Click it and Unblock the Notifications