பள்ளி மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த ‘டாஸ்மாக்’ ஊழியர் கைது

Subscribe to Oneindia Tamil

செஞ்சி: செஞ்சி அருகே பள்ளி மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரின் டாஸ்மாக் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஊரணித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன் மகன் பிரபாகரன், 34. அவலூர்பேட்டையில், "டாஸ்மாக்' விற்பனையாளராக உள்ளார். இவரது மனைவி கலைவாணி, திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆயுதப்படை போலீசாக உள்ளார்.

சில நாட்களுக்கு முன், ஊரணித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த, செஞ்சி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை, பிரபாகரன் வழிமறித்து நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.தான் அழைக்கும் இடத்திற்கு இரவில் வர மறுத்தால் கொலை செய்துவிடுவேன் என அப்போது மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் பயந்து போன மாணவி அழுதுகொண்டே, தலைமையாசிரியர் மோகனிடம் புகார் கூறியுள்ளார். உடனடியாக அவர் செஞ்சி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து, பிரபாகரன் மீது வழிமறித்தல், கொலை மிரட்டல் விடுத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவில், செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+