வெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டால் கூடங்குளம் அணு உலை மீண்டும் முற்றுகை: உதயகுமார்
நெல்லை: கூடங்குளம் அணு உலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டால் மீண்டும் அணு மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக்கோரி இடிந்தகரையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. மேலும் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் அணு மின் நிலையத்தை கடல் வழியாக முற்றுகையிடும் போராட்டமும் நடந்தது. இந்நிலையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் இடிந்தகரையில் உள்ள லூர்து ஆலய மாதா கோவிலில் நடந்தது. இதில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், தமிழர் தேசிய இயக்க தலைவர் நெடுமாறன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் தேச பொதுவுடமை கட்சி தலைவர் மணியரசன், மீனவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் அணு உலை பற்றி இன்னும் 15 நாட்களுக்குள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையென்றால் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்கள், அணு உலை எதிர்ப்பாளர்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூடங்குளம் அணு மின் நிலையத்தையும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் துறைமுகத்தையும், குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விவேகானந்தர் மண்டபத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவர் என்றார்.
தமிழர் தேசிய இயக்க தலைவர் நெடுமாறன் கூறுகையில், அணு உலை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டால் 3 மாவட்டங்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார். கூட்டத்தில் துடி என்னும் அணு சக்திக்கு எதிரான பாடல்கள் அடங்கிய சிடியை பழ நெடுமாறன் வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications