For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓரினச் சேர்க்கையாளர்களையும் ஸ்கவுட்டில் சேர்க்க ஒபாமா ஆதரவு

Google Oneindia Tamil News

Barack Obama
வாஷிங்டன்: அமெரிக்க பாய்ஸ் ஸ்கவுட்டில் ஓரினச்சேர்க்கையாளர்களை சேர்ப்பதில்லை என்ற தடையை அவர்கள் நீக்க முன்வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தத் தடையை நீக்கலாமா, வேண்டாமா என்பது குறித்த முக்கிய முடிவை பாய்ஸ் ஸ்கவுட்ஸ் விரைவில் எடுக்கவுள்ளது. இந்த நிலையில், சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு ஒபாமா அளித்த பேட்டியில், அமெரிக்க ஆடவர் ஸ்கவுட்டில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு அது தொடர்ந்து அமலில் உள்ளது. ஆனால் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் சேரும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து.

ஓரினச்சேர்க்கையாளர்கள் அனைத்து அமைப்புகளிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும். வாழ்க்கையின் அனைத்து உரிமைகளையும் அவர்களும் பெற வேண்டும்.

ஸ்கவுட் என்பது மிகப் பெரிய அமைப்பு. நாளைய தலைவர்களை உருவாக்கும் நல்லதொரு அமைப்பு. அதில் அனைவரும் இடம் பெறும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். யாரும் யாரையும் தடை செய்ய முடியாது என்பது எனது கருத்து என்றார் ஒபாமா.

கடந்த ஆண்டுதான் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு ஆதரவைத் தெரிவித்திருந்தார் ஒபாமா என்பது நினைவிருக்கலாம்.

English summary
President Barack Obama on Sunday encouraged the Boy Scouts of America to end its ban on gay members and leaders, days before the group is expected to vote on the controversial and long-standing rule. In an interview with CBS, anchor Scott Pelley asked the president if he believed scouting should be open to gays.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X