காங்கிரஸைக் உருவாக்கிய ஆலன் ஆக்டேவியன் ஹியூம் மட்டும் உயிரோடு இருந்திருந்தா...?
நாகர்கோவில்: காங்கிரஸ் என்றாலே கோஷ்டிப் பூசல்தான் என்பதை கருவில் இருக்கும் குட்டிப் பாப்பா கூட கை தட்டிச் சொல்லும். ஆனால் இப்படியெல்லாம் கூடவா வேட்டியைக் கிழித்துக் காலை வாரி விடுவார்கள் என்று ஊரார் வியக்கும் வகையிலான ஒரு கோஷ்டிப் பூசல் நிகழ்வை கன்னியாகுமரி மாவட்டம் சந்தித்து ஸ்தம்பித்துள்ளது.
டெல்லி முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸில் கோஷ்டிப் பூசல்களுக்குக் குறைவே இல்லை. ஒவ்வொரு ஊரிலும் கோஷ்டிகளின் எண்ணிக்கையும், தலைவர்களின் எண்ணிக்கையும்தான் வித்தியாசப்படுமே தவிர கோஷ்டிகளுக்குக் குறைவே இருக்காது.
தமிழகத்திலும் இதே நிலைதான். பத்து காங்கிரஸார் கூடி நின்றால், அதில் பாதிப் பேர் தலைவர்களாக இருப்பார்கள். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு வித்தியாசமான கோஷ்டிப் பூசல் நாடகம் அரங்கேறி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

6 தொகுதிகள் பல மடங்கு கோஷ்டிகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. ஆனால் தொகுதிக்கு குறைந்தது 6 கோஷ்டிகள் என சரமாரியான கோஷ்டிகள் இங்கு உள்ளனவாம்.

நேருக்கு நேரே கிடையாது
இங்குள்ள கோஷ்டித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது கூட கிடையாதாம். அப்படியே பார்த்துக் கொண்டாலும் ஒரே கடாபுடாதானாம்.

பாவம் குமாரதாஸ்!
கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவான டாக்டர் குமாரதாஸ் ஒரு நல்ல காரியம் பண்ணலாம் என நினைத்தார். அதாவது அத்தனை கோஷ்டித் தலைவர்களையும் வரவைத்து தநது மகன் திருமணத்தை பெரிய விழாவாக நடத்த திட்டமிட்டார் அவர். கேரளத் தலைவர்களையும் அழைக்க தீர்மானித்தார். அப்படியே அழைத்தார். ஆனால் யாருமே வரவில்லையாம்.

ஞானதேசிகன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம்
காங்கிஸ் தலைவர் ஞானதேசிகன் வராமல் போனதற்கு அவர் சொன்ன காரணம், விமானத்தில் எல்லாம் ஏறி அமர்ந்து விட்டாராம். ஆனால் அந்த நேரமாக பார்த்து அவருக்கு போன் வந்ததாம். அவரது அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று வந்த தகவலால் படபடவென்று அவர் விமானத்திலிருந்து இறங்கி வீட்டுக்குப் போய் விட்டாராம்.

வாசன் வீட்டில் விசேஷங்க..
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் திடீரென்று குமாரதாஸுக்குப் போன் போட்டார். போட்டவர், ஏதோ வயிறு சரியில்லை என்பது போல வீட்லே விசேஷங்க, வர முடியலை என்று கூறி விட்டு போனை வைத்து விட்டாராம். குமாரதாஸுக்கு ஒன்னுமே புரியலையாம்.

உம்மனுக்கு வந்த திடீர் வேலை...
சரி தமிழக தலைவர்கள்தான் வரவில்லை. கேரள முதல்வர் உம்மன் சாண்டி எப்படியாச்சும் வந்துருவார் என்று நம்பியிருந்த நிலையில் அவரும் போனைப் போட்டு, ஒரு திடீர்வேலை வந்துருச்சு வர முடியலை சேட்டா என்று கூறி விட்டாராம்.

வந்தாரப்பா ஈவிகேஎஸ் இ....
இந்த நிலையில் இன்னொரு கோஷ்டித் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கல்யாணத்துக்கு வந்து விடவே, அதை எதிர்பார்க்கவில்லை குமாரதாஸ். இருந்தாலும் சந்தோஷமாக அவரை வரவேற்று மகிழ்ந்தார்.

மறுநாள் சாண்டி போட்ட குண்டு...
திருமணத்திற்கு அடுத்த நாள் உம்மன், குமாரதாஸுக்குப் போன் போட்டு மணமக்களுடன் விருந்துக்கு வருமாறு அழைத்தார். அவர்களும் திருவனந்தபுரம் போய் விருந்து சாப்பிட்டார்கள். பின்னர் கிளம்பும்போது உம்மன் குமாரதாஸை தனியாகக் கூப்பிட்டு காதில் ஒரு குண்டைப் போட்டாராம்.

உம்மன் சொன்னது என்னவென்றால்...!
திருமணத்தன்று காலையில், உம்மன்சாண்டி வீட்டுக்குப் போன குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரின்ஸ் எம்.எல்.ஏ, கிள்ளியூர் தொகுதி ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ. தலைமையிலான அணியினர், குமாரதாஸ் வீட்டுக் கல்யாணத்துக்காக நீங்க தமிழ்நாட்டுக்குள்ள வந்தீங்கன்னா, உங்களுக்கு கறுப்புக் கொடி காட்டுறதா பாஜகவினர் முடிவு எடுத்துருக்காங்கனு பிட்டைப் போட்டிருக்காங்க என்றார்களாம்.

பிட்டைப் போட்டுட்டு கல்யாணத்துக்கு வந்து போஸ்...
ஆனால் அப்படி எந்தத் திட்டத்திலும் பாஜகவினர் இல்லைவே இல்லையாம். இப்படி உம்மனை திசை திருப்பி விட்டு விட்டு அங்கிருந்து கிளம்பி குமாரதாஸ் வீட்டு கல்யாணத்துக்கு வந்த பிரின்ஸும், ஜேக்கப்பும் மணமக்களுடன் நின்று வாய் விரிய சிரித்து போஸ் கொடுத்து விட்டு போனார்களாம்...

காங்கிரஸை உருவாக்கிய ஹியூம் உயிரோடு இருந்தா...?
காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய ஆலன் ஆக்டேவியன் ஹியூம் அதாவது ஏ.ஓ. ஹியூம் மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால்... என்ன செஞ்சிருப்பாருன்னு தனியா விளக்கமாகவெல்லாம் சொல்லவே தேவையில்லை...
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications