சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

காவிரி பிரச்சனை குறித்த வழக்கு விசாரணையின்போது டெல்டா மாவட்டங்களில் வாடும் பயிர்களை காக்க தமிழக அரசு மேட்டூர் அணையில் இருந்து உடனே 2 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று இரவு 8 மணிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணையில் இருந்து வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
மேட்டூர் அணை பாசனம் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 12 தேதி முதல் ஜனவரி மாதம் 28ம் தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததுடன், கர்நாடக அரசும் தமிழகத்திற்கு காவிரி நீரை தர மறுத்ததாலும் அணையில் தண்ணீரின் அளவு குறைவாக இருந்தது.
இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பதிலாக செப்டம்பர் மாதம் 17ம் தேதி தான் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணைக்கு நீர் வரத்து அவ்வளவாக இல்லாததால் டிசம்பர் 22ம் தேதி பாசனத்திற்காக திறந்துவிடப்படும் நீரின் அளவு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
மழை இல்லாததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் முகத்தில் மலர்ச்சி தெரிகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications