காவிரி பிரச்சனை: பெங்களூரில் ஷெட்டர் தலைமையில் கூடியது அனைத்துக் கட்சி கூட்டம்
பெங்களூர்: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் விவகாரம் குறித்து பெங்களூரில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் துவங்கியது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை வரும் 20ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து நேற்று கர்நாடக சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 6ம் தேதி(இன்று) அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார். அதன்படி அனைத்துக் கட்சி கூட்டம் பெங்களூரில் சில நிமிடங்களுக்கு முன்பு துவங்கியது.
ஷெட்டர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் நீர்பாசன அமைச்சர் பசவராஜ் பொம்மை, சட்ட அமைச்சர் சுரேஷ், கர்நாடக சட்டசபை சபாநாயகர் போப்பையா, எதிர்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications