நெல்லையில் 3 நாள் மீன் உணவு திருவிழா
நெல்லை: நெல்லையில் 3 நாள் மீன் உணவுத் திருவிழா நாளை தொடங்குகிறது.
இதுகுறித்து பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நீர்வள உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மைய இயக்குனர் ஹனீபா நிருபர்களிடம் கூறுகையில்,
நெல்லையில் 3 நாட்கள் மீன் உணவு திருவிழா நாளை (7ம் தேதி) தொடங்குகிறது. பாளை நூற்றாண்டு மண்டபம் எதிரேயுள்ள கிங்ஸ் ராயல் கோர்ட் அரங்கில் துவங்கும் இந்த நிகழ்ச்சியை மேயர் விஜிலா துவங்கி வைக்கிறார்.
துவக்க நாளன்று விறால் மீன் வளர்ப்பு பயிற்சி குறித்து விளக்கப்படுகிறது. உணவு மீன்கள், மதிப்பு கூட்டப்பட்ட மீன் உணவு பொருட்கள் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனங்கள், மீன் உணவு தயாரிக்கும் நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெறுகின்றன.
8ம் தேதி மாலை 4 மணி முதல் 8 மணி வரை சமையல் கலைஞர் தாமு மீன் உணவு தயாரிப்பு முறை குறித்து பெண்களுக்கு செயல் விளக்கம் செய்து காட்டுகிறார். 9ம் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை பள்ளி, கல்லூரி, பெண்கள், சுய உதவி குழுவினர் தங்கள் வீடுகளில் தயாரித்த மீன் உணவுகளை காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த மீன் உணவுகளுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது. நெல்லை மாநகராட்சி கமிஷனர் சீனி அஜ்மல்கான் நி்றைவு விழாவில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்குகிறார். தூய சவேரியர் கல்லூரி, நெல்லை மாவட்ட அறிவியல் மையம், கிங்ஸ் உணவகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளது என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications