தென்காசியில் பாலிடெக்னிக் மாணவனுடன் 38 வயது பெண் எஸ்கேப்... போலீசில் புகார்
தென்காசி: தென்காசியில் பெண் ஒருவர் பாலிடெக் மாணவரை கடத்தி சென்று திருமணம் செய்துகொண்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்தப் பெண் ஏற்கனவே கணவனைவிட்டு விட்டு கள்ளக்காதலுடன் ஓடிவந்தவர் என்றும் இப்போது அவருக்கும் அல்வா கொடுத்துவிட்டு மாணவனுடன் எஸ்கேப் ஆகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
காணாமல் போன மாணவனின் பெயர் மணிகண்டன். இவர் தென்காசி பெருமாள் கோவில் தெருவில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் இங்குள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார் .இவரது வீட்டின் அருகில் உள்ள வீட்டிற்கு கடந்த ஆண்டு தேனி மாவட்டம் பழனி செட்டி ரெட்டி போஜராஜ் மில் பகுதியை சேர்ந்த சிலேந்திரன் (28) என்பவர் மலர்விழி என்ற தனலெட்சுமி (38) என்ற பெண்ணுடன் வாடகைக்கு குடிவந்தார்.
இவர்கள் இருவரும் கணவன்,மனைவி என்று கருதி அனைவரும் மிக பாசத்தோடு பழகியுள்ளனர்.அப்போது மலர்விழிக்கும் மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்படவே இதை யாரும் தப்பாக நினைக்கவில்லை. இவர்களது நட்பு கள்ளதொடர்பாக மாறியுள்ளது.
இந்நிலையில் சிலேந்திரன், மலர்விழி ஆகியோர் சிலமாதங்களுக்கு முன் வீட்டை காலி செய்துவிட்டு சென்று விட்டனர். அன்றுமுதல் மணிகண்டனையும் காணவில்லை. பல இடங்களிலும் தேடியும் கிடைக்காமல் போகவே சிலேந்திரனின் சொந்த ஊருக்கு சென்று அவரிடம் விசாரித்தனர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது,
ஏற்கனவே மலர்விழிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும்,அவர்களை விட்டுட்டு தான் மலர்விழி தன்னுடன் ஓடிவந்ததாகவும், சிலேந்திரன் கூறினார். இப்போது தன்னை கழற்றி விட்டுவிட்டு மணிகண்டனுடன் அவர் ஓடிவிட்டதாகவும், அவர்களுக்கு திருமணம் முடித்துவிட்டதாகவும், அவர்கள் எங்கு உள்ளனர் என்று தனக்கு தெரியாது எனவும் மணிகண்டனின் பெற்றோரிடம் சிலேந்திரன் கூறினார்.
இதைத் தொடர்ந்து அவர்கள் தென்காசி போலீசில் தங்களது மகன் மணிகண்டனை மலர்விழி கடத்தி சென்று விட்டதாக புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து மலர்விழி, மணிகண்டன் ஆகியோரை தேடிவருகின்றனர்.
கணவனை விட்டு கள்ளகாதலனுடன் ஓடிவந்த பெண் அவருக்கும் அல்வா கொடுத்துவிட்டு மாணவனுடன் ஓடிய சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications