For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருப்பு சட்டை, கருப்பு சேலையில் வந்த தேமுதிக எம்எல்ஏக்கள், ஆனால், 'அந்த' 4 பேர் மட்டும் வெள்ளை!

By Chakra
Google Oneindia Tamil News

DMDK MLA
சென்னை: தமிழக சட்டசபைக்கு நேற்றும் இன்றும் தேமுதிக எம்எல்ஏக்கள் கருப்பு உடையில் வந்தனர்.

சட்டசபையில் கவர்னர் உரை மீ‌தான விவாதம் நடைபெறும் நிலையில், தேமுதிகவினர் கருப்பு சட்டை வேட்டியிலும், பெண் எம்எல்ஏக்களான சுபா, சாந்தி ஆகியோர் கருப்பு சேலையிலும் அவைக்கு வந்தனர்.

மின் வெட்டு மற்றும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காததைக் கண்டித்து அவர்கள் கருப்பு உடை அணிந்து வந்தனர்.

கட்சியின் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை.

தேமுதிகவின் உறுப்பினர் எண்ணிக்கை 29 ஆகும். இதில் தேமுதிகவில் இருந்து பிரிந்து செயல்பட்டு வரும் அருண்பாண்டியன், தமிழழகன், சுந்தர்ராஜன், மைக்கேல் ராயப்பன் ஆகிய 4 பேரும் வழக்கம் போல் வெள்ளை டிரஸ்சிலேயே வந்திருந்தனர்.

தேமுதிக உறுப்பினர்கள் இன்றும் கறுப்பு உடையிலேயே அணிந்து வந்தனர்.

English summary
MLAs of the DMDK, the principal opposition party, participated in the assembly debate wearing black shirts and saris as a token of protest against the state for the inordinate delay in disbursing the relief amount to the farmers, though it has been 23 days since the high-level team visited the delta areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X