காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காவிரி நதி நீர்ப் பிரச்சனை குறித்து 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. 5 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிடவில்லை.
கடந்த ஆண்டு இறுதியில் நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடவேண்டுமென்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியபோது, டிசம்பர் இறுதிக்குள் வெளியிடுவோம் என மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் அறிவித்தார்.
ஆனால் அது நடக்கவில்லை. மீண்டும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. 2வது முறையும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தினுடைய அறிவுறுத்தலை அமலாக்கவில்லை.
தீர்ப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆன பிறகும், தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிடவில்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையே 5 ஆண்டு காலமாக மீறி வருகிறது என மத்திய அரசை உச்ச நீதிமன்றம் வன்மையாக கண்டித்ததோடு, பிப்ரவரி மாதம் 20ம் தேதிக்குள் நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.
எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமென்று மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications