தர்மபுரி... மருமகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த மாமானார் கைது
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் மருமகளிடம் பாலியல்ரீதியாக மிரட்டல் விடுத்தும்,சேஷ்டை செய்தும் வந்த மாமானாரை போலீஸார் கைது செய்து கொண்டு சென்றனர்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த மொளப்பனஹள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன். இவரது மகன் வெங்கடேசன். வெங்கடேசனின் மனைவி பெயர் காளியம்மாள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
காளியம்மாள் அப்பகுதியில் சீட்டுப் பிடித்து வந்தாராம். அதில் கிடைத்த ரூ.20,000 பணத்தை கணவரிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கிக் கொண்ட வெங்கடேசன் தலைமறைவாகி விட்டார். இதனால் காளியம்மாள் அதிர்ச்சி அடைந்தார்.
அதை விட பேரதிர்ச்சியாக, தனியாகத்தானே இருக்கிறாய், என்னுடன் உல்லாசமாக இரு என்று மாமானார் சென்னகிருஷ்ணன் மிரட்டி தனது ஆசைக்குப் பணியுமாறு கட்டாயப்படுத்தத் தொடங்கியுள்ளார். அதற்கு மறுத்த காளியமமாளை அவர் அடித்து சித்திரவதை செய்தாராம்.
மேலும் காளியம்மாளின் நடத்தை குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவதூறாகவும் பேச ஆரம்பித்தனர். இதையடுத்து தனது சித்தப்பா வீட்டுக்குத் தப்பிப் போனார் காளியம்மாள். மேலும் தனது மாமனார் மீது தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரைப் பெற்ற போலீஸார் மாமனார் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications