இளம்பெண் பலாத்கார வழக்கு: பெண் எம்.எல்.ஏக்கள் மீது தாக்குதல்- அமளியில் கேரள சட்டசபை!

கேரளாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பு ஏற்படுத்திய சூரியநெல்லியைச் சேர்ந்த இளம்பெண் பலத்கார வழக்கை மீண்டும் உச்ச நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து தன்னை பலத்காரம் செய்தவர்களில் மாநிலங்களவை துணை தலைவரும் கேரள காங்கிரசின் மூத்த தலைவருமான பி.ஜே. குரியனும் ஒருவர் என்று அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் மீது தொடர் விசாரணை நடத்த வேண்டும் என்று கேரளாவில் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
மாதர் சங்கம் போராட்டம் சட்டப்பேரவை கூடியதும் ஜனநாயக மகளிர் சங்கத்தினர் பேரவை முன் குவிந்தனர். 150க்கும் மேற்பட்ட பெண்கள் பேரவைக்குள் நுழைய முயன்றனர். போலீசார் தடுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 4 பெண்கள் காயமடைந்தனர். 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் மகளிர் அமைப்பினர் பிஜிமோள் எம்எல்ஏ தலைமையில் போராட்டம் நடத்தினர். பேரவைக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்தபோது பிஜிமோளின் கழுத்தில் இருந்த சங்கிலி அறுந்து அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதை அறிந்ததும் எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் தலைமையில் எம்எல்ஏக்கள் அங்கு வந்தனர். காயமடைந்த பிஜிமோளை தனது காரில் ஏற்றி கொண்டு பேரவைக்கு சென்றார். அங்கு சென்ற பிஜிமோள், போலீசார் தன்னை கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டினார். அவரை மருத்துவமனையில் சேர்க்கும்படி துணை சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதனிடையே குரியன் மீதான குற்றச்சாட்டுக்கு புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக கூறிய அச்சுதானந்தன் தலைமையிலான எதிர்க்கட்சியினர் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர் .தங்கள் கட்சி பெண் எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் நடத்திய அடக்குமுறையை கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சியினர் கேரள சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications