ராத்திரி நேரத்தில் மாணவிக்கு மிஸ்டு கால்.. வாத்தியார் கைது
Subscribe to Oneindia Tamil
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் ராத்திரி நேரத்தில் மாணவிக்கு மிஸ்ட் கால் கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் ஆனந்த் நகரில் உள்ள கேகேசி பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிபவர் ஆகாஷ் சவுத்ரி. மிகவு்ம் இளம் வயதினரான இவர், தனது பள்ளியில் 8வது வகுப்பு படித்து வரும் மாணவிக்கு சமீபத்தில் கட்டாயப்டுத்தி ஒரு செல்போனைக் கொடுத்தார்.
பின்னர் தினசரி இரவு இந்த போனுக்கு மிஸ்ட் கால் கொடுத்து பேசுமாறு கட்டாயப்படுத்தி வந்தார். இனால் அதிருப்தி அடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் போலீஸில் கூற போலீஸார் வந்து ஆசிரியரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications