காதலுக்கு எதிர்ப்பு தூத்துக்குடியில் காதல் ஜோடி தற்கொலை
தூத்துக்குடி: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தூத்துக்குடியில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாதாநகரை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் கோவையில் தனியார் வங்கியில் கார் டிரைவராக உள்ளார். இவரது மகன் கவுதம். அங்குள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் குடும்பம் கோவையில் வசித்து வந்தது. தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி தளவாய்புரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் மாப்பிள்ளையூரணியில் உள்ள தனியார் வங்கியில் கார் டிரைவராக உள்ளார். இவரது மகள் சுதா. தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பிகாம் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் ஸ்ரீனிநகரில் வசிக்கும் முத்துசாமியின்தம்பி மகனுக்கு சுதாவின் அக்கா மகளைதிருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதனால் கவுதம் அடிக்கடி ஸ்ரீனிநகரில் உள்ள சித்தப்பா வீட்டுக்கு வரும்போது மாணவி சுதாவுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் உறவினர்கள் என்பதால் சகஜமாக பழகி வந்துள்ளனர். இது நாளடைவில் காதலமாக மலர்ந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்ததோடு செல்போனிலும் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இவர்கள் காதல் விவகாரம் இருவரின் வீட்டுக்கு தெரிய வந்தது. நீங்கள்தற்போது கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறேர்கள். திருமணம் செய்து கொள்ளும் வயது இப்போது கிடையாது. முதலில் படிப்பை முடியுங்கள். அதன் பிறகுதிருமணம் பற்றி யோசிக்கலாம் என பெற்றோர் அறிவுரை கூறினர். இது காதல் ஜோடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது ஊருக்கு வந்திருந்த கவுதம் நேற்றுமாலை தூத்துக்குடி மடத்தூர் விலக்கில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அங்குள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
காதலன் தற்கொலை செய்து கொண்ட விபரம் நேற்று நள்ளிரவு காதலி சுதாவுக்கு தெரிய வரவே அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இன்று அதிகாலை ஸ்ரீனிநகரில் உள்ள கவுதமின் சித்தப்பா வீட்டுக்கு வந்தார். அங்குள்ளவர்களிடம் அநியாயமாக என் காதலனை சாகடித்து விட்டீர்களே என நியாயம் கேட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியேறிய சுதா கோரம்பள்ளம் அய்யனடைப்பில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications