ஷிண்டேவை பிரதமர் டிஸ்மிஸ் செய்யாவிட்டால் பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணிப்போம்: வெங்கையா நாயுடு
திருச்சி: பாஜக, ஆர்.எஸ்.எஸ். பற்றி கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவை பிரதமர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாஜக முன்னாள் தேசிய தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காங்கிரஸ் அரசு மோசமான காலகட்டத்தில் இருக்கிறது. பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியவை தீவிரவாத பயிற்சி முகாம்கள் நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார். அவரின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.
அப்படி என்றொல் காங்கிரஸ் தலைமை சொல்லாமல் ஷிண்டேவாக இதை கூறியிருக்க மாட்டார். ஷிண்டே தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பிரதமர் மன்மோகன் சிங் ஷிண்டேவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லை என்றால் வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை பாஜக புறக்கணிக்கும்.
ஷிண்டேவின் கருத்து பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு காதில் இசை பாயந்தது போல் உள்ளது. அதனால் அந்த கருத்து தேசத்திற்கு எதிரானது என்று கூட கூறலாம். டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று அம்மாநில முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸைச் சேர்ந்த ஒரு முதல்வரே இதை ஒப்புக்கொண்டுள்ளதன் மூலம் நம் நாட்டின் பாதுகாப்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஊழல், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என அனைத்திலும் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துள்ளது.
காவிரி நீர் பங்கீடு இரு கட்சிகளுக்கு இடையேயான பிரச்சனை கிடையாது. இரு மாநில அரசுகள் பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று பத்திரிக்கைகளில் தான் செய்தி வந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் அப்படி இதுவரை அறிவிக்கவில்லை.
பாஜகவின் பிரதமர் வேட்பாளரை கட்சியில் ஆலோசித்து முடிவு செய்யப்படும். இது குறித்த எனது கருத்தை கூற முடியாது. அகில இந்திய அளவில் 3வது அணி அமையும் என்ற பேச்சு கானல் நீராகத் தான் உள்ளது என்றார்.
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications