இந்தியாவில் தமது நாட்டவர் மற்றும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு தேவையாம்: கேட்கிறது இலங்கை!!

Subscribe to Oneindia Tamil

Srilanka Flag
கொழும்பு: சென்னையில் இலங்கை வங்கிக் கிளை மீதான தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள தமது நாட்டின் நிறுவனங்கள் மற்றும் குடிமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க இலங்கை கோரியுள்ளது.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள இலங்கை வங்கியின் கிளை தாக்குதலுக்குள்ளானது. இதில் வங்கிப் பணியாளர்கள் இருவர் படுகாயமடைந்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தியாவில் வசித்துவருகின்ற இலங்கையர்களுக்கும் மற்றும் மஹாபோதி சமூகம், இலங்கை ஏர்லைன்ஸ் போன்ற இலங்கை நிறுவனங்களுக்கும் இந்திய அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டும். இது தொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+