தாமரைக்கனி முதல் மைக்கேல் ராயப்பன் வரை... சட்டசபை இதுவரை கண்ட சண்டைக் காட்சிகள்!
சென்னை: சட்டசபையில் வன்முறைகள் வெடிப்பதும், அடிதடி நடப்பதும், முட்டிக் கொள்வதும்,மோதிக் கொள்வதும் புதிதல்ல. எத்தனையோ காட்சிகளை தமிழக சட்டசபை கண்டுள்ளது.
சட்டசபை மோதல்களை கிண்டலடிக்கும் வகையில், கார்ட்டூன் வரைவதும், ஜோக் எழுதுவதும் ஒரு காலத்தில் பத்திரிக்கைளில் அதிகமாகவே இருந்தது.
மைக்குகளை வீசுவதையும், வேட்டியை கிழிப்பதையும் ஜோக்ஸ் போடாத பத்திரிக்கைகளே இல்லை. அப்படித்தான் ஒரு காலத்தில் சட்டசபை நிகழ்ச்சிகள் இருந்தன. இந்த நிலையில் இன்று சட்டசபைக்குள் ஒரு எம்.எல்.ஏவை அவரது கட்சியினரே சுற்றி வளைத்து நையப்புடைத்துள்ளனர்.
இதுவரை தமிழக சட்டசபை கண்ட தாக்குதல் காட்சிகள் ஒரு ரவுண்டப்...

தாக்குதல் நாயகன் தாமரைக்கனி
பல வருடங்களாக தமிழக சட்டசபையின் தாக்குதல் நாயகனாக வலம் வந்தவர் மறைந்த எம்.எல்.ஏ. தாமரைக்கனி. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் அசைக்க முடியாத சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர், அவரது செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர். இவர்தான் பல தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்ட பெருமைக்குரியவராக இன்றளவும் இருக்கிறார்.

ரஹ்மான்கானை போட்டுத் தாக்கினார்
சட்டசபையில் எம்.ஜி.ஆருக்கு முன்பாகவே, திமுக உறுப்பினராக இருந்த ரஹ்மான்கானை மேசைத் தாண்டிச் சென்று போய் தனது மோதிரக் கையால் சரமாரியாக தாக்கியவர் தாமரைக்கனி.

கே.கே.எஸ்.எஸ்.ஆரை விரட்டி விரட்டி தாக்கியவர்
அதேபோல முன்னாள் அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அதிமுகவில் இருந்தபோது தாமரைக்கனிக்கும், அவருக்கும் இடையே நடந்த மோதல்கள் மிகப் பிரபலமானவை. அது கடைசியில் ராமச்சந்திரன் முகத்தில் ஆசிட் அடிக்கும் அளவுக்கு விபரீதமாகிப் போனது.

பண்ருட்டி ராமச்சந்திரனை தாக்கினார் தாமரைக்கனி
பாமகவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றவர் தற்போதைய தேமுதிக அவைத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன். இவர் சட்டசபை உறுப்பினராக இருந்தபோது இவரையும் அடித்தார் தாமரைக்கனி. சட்டசபைக்குள்தான் இந்த தாக்குதல் நடந்தது. ஆனால் பின்னர் பேசுகையில், நான் செல்லமாக தட்டிதான் கொடுத்தேன், அடிக்கவில்லை என்றார்.

சரமாரியாக அடி வாங்கிய டாக்டர் செல்லக்குமார்
இதே தாமரைக்கனியிடம் சரமாரியாக அடி வாங்கிய பெருமைக்குரியவராக முன்னாள தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் இருக்கிறார். சட்டசபைக்குள் வைத்து செல்லக்குமாரை அடித்து வெளுத்து விட்டார் தாமரைக்கனி.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் போர்ககளமாக மாறிய சட்டசபை
எம்.ஜி.ஆர் மறைந்த பின்னர், அவரது மனைவி ஜானகி முதல்வராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து 1988ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி சட்டசபைக் கூட்டம் நடந்தது. பெரும்பான்மையை நிரூபிக்க இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது பெரும் வன்முறை மூண்டது. வெளியிலிருந்து பலர் உள்ளே புகுந்து தாக்கத் தொடங்கினர். மைக்குகள் பறந்தன, வேட்டிகள் கிழிந்தன. மின்விசிறிகள் தூக்கி வீசப்பட்டன. இருக்கைகளைத் தூக்கி அடித்தனர். போலீஸார் உள்ளே புகுந்து தடியடி நடத்தும் அளவுக்கு நிலைமை போனது.

கருணாநிதியின் மூக்கு உடைப்பு
1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி நடந்த வன்முறையின்போது சட்டசபையில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியையே தாக்கி விட்டனர். அவரது முகத்தில் அதிமுகவினர் குத்தியதாக கருணாநிதி தெரிவித்தார். மேலும் அவரது மூக்குக் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.

என் சேலையை கிழித்தார் துரைமுருகன்- ஜெ. புகார்
அதே நாளில், அதே வன்முறையில் தன்னைத்தான் திமுகவினர் தாக்கியதாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா குற்றம் சாட்டினார். மேலும் துரைமுருகன் தனது சேலையைப் பிடித்து இழுத்து கிழித்து, தாக்கியதாக அவர் கூறவே மேலும் பரபரப்பானது.

1999ல் மீண்டும் தாமரைக்கனி விஸ்வரூபம்
1999ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி சட்டசபையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தார் தாமரைக்கனி. அப்போது விவசாயத்துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தை அப்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இருந்த தாமரைக்கனி சரமாரியாக தாக்கினார். இதில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.

நாக்கைத் துருத்திய விஜயகாந்த்
அதன் பின்னர் சட்டசபையில் பெரிய அளவில் வன்முறை ஏதும் இல்லை. ஆனால் கடந்த ஆண்டு பெரும் அடிதடியாகி விடுமோ என்ற சூழல் எழுந்தது. எதிர்க்கட்சி் தலைவரான விஜயகாந்த் கடும் கோபத்துடன் நாக்கைத் துறுத்தியபடியும், கையை நீட்டியபடியும் ஆவேசமாககப் பேசிய காட்சியை தமிழகமே பதறிப் போய்ப் பார்த்தது.
இன்று தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் மீதான தாக்குதல்தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக சட்டசபையில் நடந்துள்ள மிகப் பெரிய அடிதடி தாக்குதலாகும்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications