காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 15,000 இழப்பீடு: சட்டசபையில் ஜெ. அறிவிப்பு

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத முடிவில் தமது பதிலுரையில் ஜெயலலிதா கூறியதாவது:
தமிழகத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்படும். மொத்தம் 1 லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகளுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ541 கோடி கூடுதல் செல்வாகும். மேலும் 50% க்கு மேல் பயிர் இழப்பு ஏற்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்கப்படும். 50%க்கு கீழே இழப்பு இருப்பின் இழப்புக்கேற்ப நிவாரணத் தொகை வழங்கப்படும்.
காவிரி டெல்டாவில் ரூ181 கோடி செலவில் 15 ஆயிரம் பண்ணை குட்டைகள் அமைக்கப்படும். காவிரி டெல்டாவில் ரூ1336 கோடியில் இதர வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.
தமிழகத்தில் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களுமே வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்படுகிறது. வறட்சியால் அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் நிலவரி ரத்து செய்யப்படுகிறது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபையில் மத்திய அரசு புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாட்களுக்குப் அதிலாக 150 நாட்கள் வேலை வழங்கப்படும்.
தமிழக விவசாயிகள் வறட்சியால் எவரும் தற்கொலை செய்யவில்லை. இருப்பினும் தற்கொலை செய்ததாக சொல்லப்படுகிற 9 விவசாயிகளின் குடும்பங்களின் வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு தலா ரூ3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
இலங்கையில் தமிழர்கள் தமது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications