சட்டசபை கூட்டத் தொடர் இன்று முடிகிறது; ஜெயலலிதா பதிலுரை- திமுக புறக்கணிப்பு
சென்னை & திருச்சி: சட்டசபைக் கூட்டத் தொடர் இன்று முதல்வர் ஜெயலலிதாவின் பதிலுரையோடு முடிவுக்கு வருகிறது.
ஆனால், இன்றைய கூட்டத்தை திமுக புறக்கணிக்கவுள்ளது. இதில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் ரோசய்யாவின் உரையோடு கடந்த 1ம் தேதி தொடங்கியது.
அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தத் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உரையாற்றினர்.
அப்போது ஏற்பட்ட மோதலையடுத்து திமுக எம்எல்ஏக்கள் சில முறை வெளிநடப்பு செய்தனர். இரு முறை வெளியேற்றப்பட்டனர். நேற்று 14 திமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந் நிலையில் எம்எல்ஏக்களின் விவாதங்களுக்கும், கேள்விகளுக்கும் பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா இன்று பதிலளித்து உரையாற்றுகிறார்.
முன்னதாக, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகிறார். சட்டப் பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றுடன் பேரவை ஒத்திவைக்கப்படுகிறது.
திமுக பங்கேற்பில்லை:
இந் நிலையில் திருச்சி மாவட்ட திமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் திருச்சி பொன்மலை ஜி கார்னரில் ரயில்வே மைதானத்தில் நேற்றிரவு நடந்தது.
அதில் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டமன்ற கூட்டத்தில் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேச முடியவில்லை. டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்றால் ஏற்க மறுக்கிறார்கள்.
விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை இயற்கை சாவு தான் என்று அதிமுக அமைச்சர்கள் பதிவு செய்கின்றனர். இதையும் தாண்டி பேசினால் தடுத்து நிறுத்துகின்றனர். சட்டமன்ற கூட்டம் நாளையுடன் முடிவடைகிறது. ஆனால் நடந்த கூட்டத்தில் ஒருவர் கூட முழுமையாக பேச முடியவில்லை.
இதனால் திமுக உறுப்பினர்கள் யாரும் அவைக்கு செல்ல வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறிவிட்டார். இதனால் திமுகவினர் சட்டமன்ற கூட்டத்திற்கு நாளை செல்வது இல்லை என்று முடிவு செய்துள்ளோம் என்றார்.
-
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications