காவிரி நீரைத் திறக்க எதிர்ப்பு: கே.ஆர்.எஸ். அணையை முற்றுகையிட முயன்ற எதியூரப்பா உட்பட 200 பேர் கைது
மாண்டியா: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் எதியூரப்பா தமது ஆதரவாளர்களுடன் கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகை முயன்றதால் கைது செய்யப்பட்டார்.
காவிரியில் 9 டி.எம்.சி. நீரை திறந்துவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி. நீரை திறந்துவிட உத்தரவிட்டது.
கர்நாடகா உடனே நீரைத் திறக்காமல் இன்றுதான் திறக்க உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிடப் போவதாக எதியூரப்பா அறிவித்தார்.
இன்று மாலை 4 மணியளவில் கிருஷ்ணராஜ சாகர் அணையை தமது ஆதரவாளர்கள் 200 பேருடன் சேர்ந்து எதியூரப்பா முற்றுகையிட சென்றார். இதனால் எதியூரப்பாவும் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications