அப்சல் குரு தூக்கு எதிரொலி: மோடியின் கும்பமேளா பயணம் ரத்து!

அலகாபாத் கும்பமேளாவில் இந்துத்துவ சக்திகளான "அகாடா" சாதுக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். லட்சக்கணக்கான பொதுமக்களும் கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றன.
இதே கும்பமேளாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சாதுக்கள் மாநாடு நடைபெற்றது. இதில் சாதுக்கள், விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டமும் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார்.
இதனிடையே குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வரும் 12-ந் தேதி கும்பமேளாவில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதால் பாதுகாப்பு காரணங்களுக்காக மோடி தமது கும்பமேளா பயணத்தை ரத்து செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications